search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு குறும்படங்கள்"

    • கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது.
    • னபோதைபொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கோவையில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு குறும்படங்கள்

    கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது.

    நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த போதைபொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கோவை:

    கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுப்பது, போக்குவரத்து சீரமைப்பு, விபத்துகளை தடுக்க என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மேலும் நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வழக்குகளை விரைந்து முடிக்கவும், புகார் கொடுக்க வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கமிஷனரை பார்ப்பதற்காகவும், புகார் மனு அளிப்பதற்காகவும் எண்ணற்ற மக்கள் வருவார்கள். அப்படி வரும் மக்களுக்கு மோசடி, குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஒரு புதிய முயற்சியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.வி. ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை இன்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படம், மோசடி எப்படி நடைபெறுகிறது, எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள், என்னென்ன குற்றங்கள் நடைபெறுகிறது என குறும்படங்கள் போடப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தினமும் இந்த டி.வியில் குற்றங்கள் குறித்த குறும்படங்கள் திரையிடப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை கமிஷனர் சுகாசினி உள்பட போலீசார் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த போதைபொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    ×